சங்கத்தமிழ்க் கவிதைகளைத் தேடியபொழுது பாட்டிலக்கண முறைப்படி ஓசையொழுங்குடன் கூடிய மூலக் கவிதையினையும், பின்பு சிறிதளவு தமிழறிந்தோரும் படித்து எளிதாகப் பொருள் புரியும் வண்ணம் அவ்வரிகளைப் பிரித்த கவிதையினையும், கவிதைக்கான உரைகளையும் ஒரே செயலியில் இந்தச் செயலி உலகில் என்னால் பார்க்க முடியவில்லை. அதை நிவர்த்தி செய்ய தன்னார்வம் கொண்டதன் விளைவே இந்தச் செயலி.இந்தச் செயலி முழுக்க முழுக்க சங்கத்தமிழ் சார்ந்த பதிவுகளையும், கவிதைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.மேலும் செயலி உலகில் சங்கத்தமிழுக்கென்று செயலிகள் மிகச் சொற்ப அளவிலே வலம்வந்துகொண்டு இருக்கின்றன அவைகளுக்கு வலுச்சேர்க்க ஒரு தனித்துவம் வாய்ந்த செயலியாக இதை மெருகேற்றிக்கொண்டு இருக்கவேண்டும் என்பதே எங்களது கனவு...